புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கி, அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திவருகிறது சக்தி குழும தலைவர் மாணிக்கம் நிறுவிய மிராக்கிள் இன்டக்கிரேடெட் ஹெல்த் சென்டர்.

மக்கள் அனைவரையும் ஒரு சமூகமாக நலிவுற்ற புற்றுநோயாளிகளின் நலனுக்காக  ஒன்றிணைக்கும் நோக்கில் ‘மிராக்கிள்ஸ் மாரத்தான்’  என்ற மனிதநேய மராத்தான் ஓட்டப் போட்டியை  தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, அண்மையில் இம்மையம் மற்றும் என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தின.

“வலி முதல் வல்லமை வரை” என்ற உணர்வுப்பூர்வமான கருத்தை மையமாகக் கொண்டு, இந்த நிகழ்ச்சி ஏழை புற்றுநோயாளிகளுக்கான நிதி சேகரிப்பு முயற்சியாகவும் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
MAILMIRKLE scaled
இந்த ஓட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் 10 கிலோமீட்டர் பிரிவில், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் 5 கிலோமீட்டர் பிரிவில், குழந்தைகள் 2 கிலோமீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றனர். மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்காக 10 கிலோமீட்டர் பிரிவு அமைக்கப்பட்டது.

பங்கேற்ற ஒவ்வொருவரும் ரூ.300 பதிவு கட்டணத்தை செலுத்தி தங்கள் பங்களிப்பை உறுதி செய்தனர்.மொத்தம் சுமார் 7500 பேர் பங்கேற்றனர்.பங்கேற்பாளர்களுக்கு டி-ஷர்ட், சிற்றுண்டி, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
WHITEWAVE MIRAKLE scaled
இந்த நிகழ்வில் சக்தி குழும தலைவர் மாணிக்கம், ஏபிடி லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் எம். ஹரிஹர சுதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.