உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தலைமைத்துவம் மற்றும் சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் ‘மில்லினியம் ஃபெலோஷிப் 2026’ திட்டத்திற்கு, கோவை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தில் பங்கேற்க 170 நாடுகளைச் சேர்ந்த 330-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து 76 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற தேர்வு முறையின் அடிப்படையில், உலக அளவில் 60 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் கே.பி.ஆர். கல்லூரி மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
மாணவர்களின் தலைமைத்துவத் திறன், புதுமையான சிந்தனை, சமூகப் பொறுப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தேர்வு நடைபெற்றது.
இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் தலைவர்களுடன் இணைந்து செயல்படுவதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட சமூக மேம்பாட்டுத் திட்டங்களையும் செயல்படுத்த உள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை கல்லூரிச் செயலாளர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், முதல்வர் அகிலா முத்துராமலிங்கம் ஆகியோர் பாராட்டினர்.
