கோவை, இந்துஸ்தான் சுகாதார அறிவியல் கல்லூரியின் இருதய தொழில்நுட்பவியல் மற்றும் கண் பார்வையியல் துறை சார்பில், இந்துஸ்தான் மருத்துவமனையுடன் இணைந்து, உடையாம்பாளையம் சமுதாயக் கூடத்தில் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமில் பொதுமக்களுக்கு இலவசமாக ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை, உடல் எடை பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை ஆகிய மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டன.
மேலும், சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சரியான வாழ்க்கை முறை குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
