இருதயத்தின் துடிப்பு இயல்பை விட மிக வேகமாகவோ, மிக மெதுவாகவோ அல்லது சீரற்ற முறையிலோ இருப்பது இருதயத் துடிப்பு கோளாறு எனப்படும். இத்தகைய பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கும் வகையில், கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் சீரற்ற இருதயத் துடிப்பு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம் நவம்பர் 12 முதல் நவம்பர் 26 வரை நடைபெற உள்ளது. (ஞாயிறு மற்றும் பொது விடுமுறைகள் தவிர)

இந்த மருத்துவ முகாம் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். தொடர்ச்சியான களைப்பு, தலைசுற்றல், விரைவான இருதயத் துடிப்பு, இருதயத் துடிப்பு தவறுதல், மூச்சுத் திணறல், படபடப்பு, மார்பு வலி அல்லது மார்பில் அழுத்தம் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் இருதயத் துடிப்பு பாதிப்புகளைக் கண்டறிவதற்கான சிறப்புப் பரிசோதனைகளுடன், தைராய்டு பரிசோதனை, ஹீமோகுளோபின் அளவு, பொட்டாசியம் அளவு, கிரியேட்டினின் அளவு, எக்கோ, இ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும், இருதயத் துடிப்பு சிறப்பு மருத்துவ நிபுணரின் ஆலோசனையும் வழங்கப்படும்.

இருதய துடிப்பு நோய்கள் தொடர்பான பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவதற்கு இந்த முகாம் பொதுமக்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். மேலும்.விவரங்களுக்கு: 74188 87411. கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை, கோயம்புத்தூர்.