வெள்ளலூர் உரக்கிடங்கில் மாநகராட்சி ஆணையாளர், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அங்கு நடைபெற்று வரும் பயோ-சிஎன்ஜி ஆலை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி, திட்டமிட்ட கால அட்டவணையின்படி பணிகளை விரைந்து முடித்து, திட்டத்தைச் செயல்படுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, இறைச்சிக் கூடத்தில் செயல்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் ஆய்வு செய்தார். தற்போதுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தைச் சீரமைத்து, நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், கழிவுநீரை சுற்றுச்சூழல் தரநிலைகளுக்கு இணங்க முறையாகச் சுத்திகரித்து, பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவதை உறுதி செய்யவும், சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்தவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
