கோவையில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், பெரியார் அறிவுலகத்தின் நான்காவது தளத்தில் அமைந்துள்ள தமிழ் நூல்கள் பிரிவில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களில் போலியான பதிப்பகங்கள் மற்றும் போலியான எழுத்தாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாகப் புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய புத்தகங்கள் நூலகத்திலிருந்து அகற்றப்பட்டன. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, நான்காவது தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விதம், அவற்றின் பதிப்பகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் குறித்த விவரங்கள் தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.