தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், வணிகமுறையில் காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் இப்பயிற்சி நடைபெறுகிறது. இரண்டு நாட்களும் காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.
இதில், காய்கறி மற்றும் பழங்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி வணிகரீதியாக தயாரிப்பது குறித்த தொழில்நுட்பங்கள் செயல்விளக்கத்துடன் கற்றுத்தரப்பட உள்ளன.
குறிப்பாக, உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் தயாரித்தல், பலவகை பழ ஜாம், பழரசம், தயார் நிலை பானம், ஊறுகாய், ஊறுகனி, பழப்பார் ஆகியவை தயாரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சிக் கட்டணமாக ஒருவருக்கு ரூ.1,770 வசூலிக்கப்படும். இத்தொகையை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94885 18268 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
