பாரதியார் பல்கலைக்கழக அளவிலான 2026–27ம் கல்வியாண்டுக்கான மகளிர் கிரிக்கெட் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

நாக்-அவுட் சுற்றில் பாரதியார் பல்கலை அணியுடன் மோதிய ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அணி, 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 108 ரன்கள் எடுத்தது. சந்தியா ஆட்டமிழக்காமல் 52 ரன்களும், சிவரஞ்சனி 34 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து விளையாடிய பாரதியார் பல்கலை அணி 28 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அணியின் வைஷ்ணவி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அந்த அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லீக் சுற்றின் முதல் போட்டியில் நிர்மலா கல்லூரி அணியை எதிர்கொண்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அணி, அந்த அணியை 40 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. பின்னர் 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மித்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

1a 10 scaled

இரண்டாவது போட்டியில் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணிக்கு எதிராக முதலில் விளையாடிய ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அணி 160 ரன்கள் குவித்தது. சந்தியா 65 ரன்களும், அப்சரா 48 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய கோபி கல்லூரி அணி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்றாவது போட்டியில் வி.இ.டி., இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அணியை எதிர்கொண்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அணி 120 ரன்கள் எடுத்தது. சந்தியா 74 ரன்களும், சிவரஞ்சனி 35 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய எதிரணி இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது. இதன் மூலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டம் வென்ற கல்லூரி மகளிர் கிரிக்கெட் அணிக்கு, கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.