பொதுவாக நாம் அனைவரும் விரும்புவது தனக்கு பிடித்ததை அடைய வேண்டும் என்று தான். ஆனால் நாம் நினைத்த படியே தான் நம் வாழ்க்கை இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா..?ஆம் .. அது தான் உண்மை. நம் ஆள்மனதில் இது கண்டிப்பாக நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தால் அது கட்டாயம் நடந்தே தீரும். ஆனால் நம்மில் பலர் நம் ஆழ்மனதை முழுமையாக நம்புவதில்லை. எண்ணம் போல் வாழ்க்கை என்பதற்கேற்ப இந்த உலகமும் நம் எண்ணத்திற்கு அதிக மதிப்பு கொடுக்கிறது.
அதன் அடிப்படையில், நாம் அடிக்கடி பார்க்கும் 11:11, 1111 என்ற எண்களுக்கும் ஓர் தனித்துவம் உள்ளது. அவற்றின் உண்மையான பொருளை பற்றி இங்கே காணலாம்.
ஒரே மாதிரியான எண்கள் மீண்டும் மீண்டும் வருவதால், 111,222,333 இது மாதிரியான எண்களை தேவதை எண்கள் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் 11:11 எண் நமக்கு புதுவிதமான சிந்தனைகளை வழங்கி நம்பிக்கையுடன் இருப்பதற்கு வழிநடத்துவதாக கருதப்படுகிறது.
கணிதமுறையிலும், 11 முதன்மை எண்களாக இருப்பதால் அறிவு, ஆற்றல் , சக்திகளை குறிப்பதாக நம்பப்படுகிறது. அதோடு மற்றொரு 11 – ஐ அதாவது 11:11 அல்லது 11/11 ஆக பார்க்கும் போது அவை அதிக முக்கியத்துவதுடன் தெரிகிறது. ஒரு விஷயத்தை நாம் பார்க்கும் போது, அவை கண்டிப்பாக கிடைக்கும் என்று உறுதியோடு இருப்பது போல 11:11 ஐ பார்த்தால் சரியான வழிகாட்டுதலுடன் செல்வதாகவும், நேர்மறையான சிந்தனைகளுடன் இருக்க செய்வதாகவும் உணர்த்துகிறது. இதனாலே, 11:11 அனைவரிடமும் பேசும் பொருளாக திகழ்கிறது.