கோவை, செல்வபுரம் செல்வசிந்தாமணி குளத்தில் இருந்து உக்கடம் பெரிய குளத்திற்கு செல்லும் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராஜவாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் உக்கடம் புறவழிச்சாலையில் உள்ள அசோக்நகர் பகுதிக்குள்

1d 3 scaled புகுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்

வாய்காலில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் ஒடும் நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் வாய்க்காலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜவாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர், அதே பகுதியை சேர்ந்த பிரபு நகர் பகுதியில் முழுமையாக புகுந்துள்ளது.
குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ள நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சம்பத்குமார், மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா ஆகியோர் நேரில் அந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.

1c 3 scaled

தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகளை அதிகாரிகள் தீவிரபடுத்தியுள்ளனர்.
முழங்கால் அளவு தண்ணீரில் அமைச்சர் சம்பத்குமார் மற்றும் அதிகாரிகள் தண்ணீர் புகுந்த பகுதிகளை பார்வையிட்டனர்.

2b 3 scaled

அமைச்சர் சம்பத்குமார் இதுகுறித்து கூறும்பொழுது: கனமழை காரணமாக செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து வெளியேறிய தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது.
உடனடியாக தண்ணீரை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தண்ணீரை அகற்றுவதற்கான வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.

1. sampath kumar scaled

மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களுக்கு காலை உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

ஊழியர்களுக்கு தேவையான உபகரணங்கள் நம்மிடம் இருக்கிறது.
இந்த பகுதியில் கூடிய விரைவில் நீரை வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தண்ணீரை முழுமையாக அகற்றி விடுவோம் என்று தெரிவித்தார்.