ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இளநிலை, முதுநிலை பல் மருத்துவம் படிக்க புதிதாக சேர்ந்த மாணவர்களையும் வரவேற்கும் வகையில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவத் துணைப் படிப்புகள் நிறுவனத்தின் மருந்தியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஸ்ரீராம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில்: மக்களின் வாய்வழி ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துவதில் பல் மருத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
கல்வியில் சிறந்து விளங்குதல், தொழில்முறை அறநெறிகளைக் கடைப்பிடித்தல், நோயாளிகளிடம் கருணையுடன் நடந்துகொள்ளுதல் மற்றும் நோயாளிகளின் நலனை மையமாகக் கொண்ட சிகிச்சை அணுகுமுறையைப் பின்பற்றுதல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்.
கல்லூரியின் முதல்வர் டாக்டர் தினகர், துணை முதல்வர் டாக்டர் கௌரி, பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
