கோவை பெரிய தடாகம் பகுதியில் பிரசித்தி பெற்ற லலிதாம்பிகை கோவிலில், கமல தாரணி சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஸ்வாமி ஜகமானந்தா சரஸ்வதி தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நவராத்திரி நிறைவு நாள் மற்றும் விஜயதசமி நாளில், மகாலட்சுமி அலங்காரத்தில் தாமரைப் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கமலா தாரணி அலங்காரமும், பூஜையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் லீலாவதி சம்பத்குமார், சரவணன், பிரசாந்த் பண்டிட், மனோ பண்டிட், ஒருங்கிணைப்பாளர் கணேஷ், பாபு, ரவி.உட்பட பலர் கலந்து கொண்டனர்.

13 4 scaled

லலிதாம்பிகை டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஸ்வாமி ஜகதாத்மானந்தா சரஸ்வதி பேசும்போது: நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் நிலவிட லலிதாம்பிகை கோவிலில் தொடர்ந்து பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகிறோம். நவராத்திரி நிறைவு நாள் நிகழ்ச்சியில் மக்கள் ஒற்றுமையோடு மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இந்த அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களும், ஏழை மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி குழந்தைகள் பயன்படும் வகையில் செயல்படுத்தி வருகிறோம். லலிதாம்பிகை கோவில் எதிரே பாபா கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பாபா அருள் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். நிகழ்ச்சியில் கோத்தகிரி ஓம் நமோ நாராயணா நாம கீர்த்தனா குழுவினரின் பஜன் நடைபெற்றது.