பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பாரம்பரிய நடனங்களை ஆடியும், நவராத்திரியின் சிறப்புகளைப் பற்றிப் பேசியும், பல்வேறு தேவியரின் வடிவங்களில் வேடமிட்டும், பக்திப் பாடல்களைப் பாடியும் மாணவர்கள் அசத்தினர். பள்ளியின் முதல்வர் வித்யாசங்கர், நவராத்திரியின் ஒவ்வொரு நாளின் சிறப்புகளையும் விளக்கி பூஜைகளைத் தலைமை தாங்கி நடத்தினார்.

