பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப் படத்திற்கு பள்ளியின் முதல்வர் வித்யாசங்கர், ஆசிரியர்கள், மாணவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

2. bhavan scaled

பள்ளி முதல்வர் பேசுகையில்: ‘கனவு காணுங்கள்; அந்த கனவை நனவாக்க அயராது உழையுங்கள்’ என்ற கலாமின் பொன்மொழியை எடுத்துரைத்தார். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் படியும், நாட்டின் எதி்ர்காலத் தூண்களாக உயர்ந்த லட்சியங்களுடன் வாழும்படியும் கேட்டுக்கொண்டார்.