தசரா பண்டிகையை முன்னிட்டு, கோவை போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் காரக்பூருக்கும், காரக்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: போத்தனூரில் இருந்து இன்று (அக்., 14) காலை 7:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06149), நாளை (அக்., 15) இரவு 8:00 மணிக்கு காரக்பூரை சென்றடையும்.
இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, கட்டாக் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மறுமார்க்கத்தில், அக்., 15-ம் தேதி இரவு 11 மணிக்கு காரக்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06150), அக்., 17-ம் தேதி காலை 8:45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். தசரா பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
