ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கான அறிமுக விழா நடைபெற்றது.
எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலர் ராம்குமார், தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ்குமார், மருத்துவ இயக்குநர் ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன், கல்லூரி முதல்வர் சத்யா மற்றும் மருத்துவ ஆலோசகர்கள் கலந்துகொண்டனர்.
