கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் மாணவர்களின் தொழில்முனைவோர் சிந்தனையை வளப்படுத்தும் நோக்கில், ‘மிஷன் ஒன்’ தொழில் முனைவோர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி கலந்துகொண்டு, வெற்றியின் பாதையில் தடம்பதிப்பதற்குக் கடின உழைப்பு அவசியம் எனக்கூறித் தலைமையுரையாற்றினார்.
கல்லூரியின் முதல்வர் கீதா, உயர்ந்த இலட்சியம், புதிய சிந்தனை, சாதிக்கும் மனப்பான்மை இம்மூன்றும் இளைஞர்களைச் சாதனையாளர்களாக மாற்றும் எனக்கூறினார்.

கோவை ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கவிதாசன், மாணவர்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்முனைவோருக்கான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக்கூறிச் சிறப்புரையாற்றினார்.
ரோட்டரி பொதுமக்கள் தொடர்புப்பிரிவுத் தலைவர் கோகுல்ராஜ், 2026 – 2027ஆம் ஆண்டிற்கான ரோட்டரி உதவி நிர்வாகி பால்வில்லியம், ஞான சஞ்சீவனம் குருகுலம் மற்றும் மிஷன் மில்லியனர் கிளப்பின் நிறுவனர் சசிகுமார் ஆகியோர் பேசினர். மாபெரும் தொழில்முனைவோர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
