ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் 28வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ராஜவேல் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி பேசுகையில்: சாதித்த மாணவர்களுக்கும், சாதிக்கும் மாணவர்களுக்கும் கல்விதான் மிகப்பெரும் பேராயுதம். கடுமையான உழைப்பு, விடாமுயற்சி மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும் ஏணிப்படி.

கல்வி என்பது பட்டம் பெறுவதுடன் நின்று விடுவதில்லை. அது ஒரு தொடர் பயணம். மனிதநேயம், அறம், ஒழுக்கம், உயர்வு எல்லாவற்றிற்கும் கல்வியே அடிப்படை. தொழில்நுட்பக் கல்வி, தொழில்நுட்ப அறிவு தற்கால சூழலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அது மானுட சமுதாய வளர்ச்சியில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது என்றார். நிகழ்வில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பட்டம் பெற்றனர்.