1970களில் இந்தியாவை சேர்ந்த மிக சக்திவாய்ந்த கோடீஸ்வரர் ஒருவர் ஒரு பெரும் விருப்பத்திற்காக சுவிட்சர்லாந்து பயணித்தார். சுவிஸ் நாட்டு வாட்சுகளுக்கு இந்தியாவில் அப்போதும் எக்கச்சக்க மவுசு இருந்தது.

எனவே அந்த நாட்டில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றுடன் கூட்டமைத்து இந்தியாவில் தரமான வாட்ச்களை உருவாக்கலாம் எனும் தனது விருப்பத்தை அந்த நிறுவனத்தினருடன் நேரில் சென்று தெரிவித்தார் அந்த செல்வந்தர்.
TATAWAT scaled“உங்களால் எல்லாம் இது போன்ற உலகத்தரம் கொண்ட கைக்கடிகாரங்களை உருவாக்கமுடியாது,” என ஏளனமாக சுவிஸ் நிறுவனத்தினர் பேச, அங்கிருந்து விமானத்தில் ஒரு வைராக்கியத்தோடு இந்தியா வந்தார் அந்த நபர்.
THENAMEIS scaled
தான் அணிந்து இருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை கழட்டி வைத்துவிட்டு, தனது தொழில் குழுமத்தின் நம்பகமான தலைமை நிர்வாகியை அழைத்து ” உங்களுக்கு நான் 5 வருடகால அவகாசம் தருகிறேன். நீங்கள் அதற்குள் நமதுநாட்டில் இருந்து உலகத்தரத்தையும், நம்பகத்தன்மையையும் கொண்ட கைக்கடிகாரத்தை உருவாக்கவேண்டும். அதுவரை நான் வாட்ச் அணியமாட்டேன்,” என கூறிவிட்டு சென்றார்.
JRDD scaledஅந்த செல்வந்தர் பெயர் ஜெ.ஆர்.டி. டாடா, அவரின் கனவை நிஜமாக்க டாடா குழுமம் கண்டறிந்த இடம் தமிழ்நாடு, டாடா இண்டஸ்ட்ரீஸ் (Tata Industries) மற்றும் தமிழ்நாடு (TamilNadu) சேர்ந்து உருவாக்கியதே டைடன் (TI TAN).
our%20heritage 1
இதன் உற்பத்தி நிலையம் தமிழகத்தின் ஓசூரில் உள்ளது. இந்திய வாட்ச் சந்தையில் சுமார் 40% முதல் 55% வரையிலான பங்கைக் கொண்டு சந்தையின் முன்னணி நிறுவனமாகத் ‘டைட்டன்’ நிறுவனம் திகழ்கிறது.

1984ல் இதற்கான ஒப்பந்தம் தமிழக அரசுடன் செய்யப்பட்டு ஓசூரில் இதன் உற்பத்தி நிலையம் திறக்கப்பட்டது.
JRD LAUNCHING scaled
சுவிட்சர்லாந்து மட்டுமல்ல ஐரோப்ப கண்டமே வியப்புடன் பார்க்கும்படி 1993ல் அங்கு தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்தது ‘டைட்டன்’.  அதோடு நிற்காமல் 2002ல் உலகின் மிக மெல்லிய வாட்சை உருவாக்கி மிரட்டியது. எந்த இடத்தில் வைத்து ஏளனம் செய்யப்பட்டதோ, அந்த இடத்தில் தனது ஆற்றலை நிரூபித்துக்காட்டியது இந்தியாவின் ‘டைட்டன்’.
Edge%20 %20The%20slimmest%20watch%20in%20the%20universe

சாதாரண நபர் முதல் பெரும் செல்வந்தர்கள் வரை விரும்பக்கூடிய கைக்கடிகாரங்களை டைட்டன் தயாரிக்கிறது. இப்போது இந்நிறுவனத்திடம் வருடத்திற்கு கிட்டத்தட்ட 2 கோடி வாட்சுகளை உருவாக்கும் திறன் உள்ளது. வாட்ச் பிரிவை தாண்டி நகை தயாரிப்பிலும் டைட்டன் வெற்றிகண்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு பக்கபலமாக இருந்து வருகிறது.

இன்றும் சவால்களை எதிர்கொள்ளும் ‘டைட்டன்’

அன்று ‘டைட்டன்’ முன்பு தோன்றிய சவால் போல இன்றும் ஒரு சவால் எழுந்துள்ளது. பேட்டரி அல்லது மின்சாரம் இல்லாமல், முழுக்க முழுக்க இயந்திர பாகங்களின் இயக்கத்தை மட்டுமே நம்பி செயல்படும் கைக்கடிகாரங்கள் ‘மெக்கானிக்கல் வாட்ச்’ என அழைக்கப்படுகின்றன.
90158KM01 1
இவற்றின் விலை சற்று அதிகம் என்றாலும் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் பிரிவினர் மத்தியில் இந்த வகை வாட்சுகளுக்கு மவுசு உயர்ந்து வருகிறது. இன்று இதற்கான இந்திய சந்தைக்குள் சுவிஸ் மற்றும் ஜப்பானிய பிராண்டுகளின் வரவு, விரிவாக்கம் தொடர்கிறது.

எனவே இப்படி ஒரு சூழலை டைட்டன் எப்படி பார்க்கிறது? இது போட்டியா அல்லது வாய்ப்பா?  என அதன் வாட்ச் பிரிவின் தலைமை செயல் அதிகாரி குருவிலா மார்கோஸ் இடம் கேட்டதற்கு, அவர் இரண்டுமே என ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் பதிலளித்துள்ளார்.
TITANS scaledநிச்சயம் ‘மெக்கானிக்கல் வாட்ச்’ பிரிவில் வாடிக்கையாளர்களை தக்கவைக்க வலுவான போட்டி இந்திய வாட்ச் சந்தையில் நிலவும் என்றாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் தான் புதியவற்றை உருவாக்க வேண்டிய நிலைக்கும் நம் அனைவரையும் தள்ளும். வாடிக்கையாளர்களுக்கு நமது பக்கமிருந்து அதிக மதிப்புக்கொண்ட தயாரிப்புகளை வழங்கவேண்டும் என நம்மை ஊக்கப்படுத்தும் என கூறியுள்ளார்.

எனவே பிறர் நம் திறமை மீதும், ஆற்றல் மீதும் சந்தேகப்பட்டாலோ, அல்லது நமது துறையில் பெரும் நிறுவனங்களுடன் போட்டிகள், சவால்கள் வந்தாலும் நாம் யார் என்பதை நமக்கு காட்ட இவை ஒரு சந்தர்ப்பம் தான் என பார்க்கும் பக்குவத்தை வளர்த்து கொண்டு, முன்னேறிச்செல்வது நமக்கு ஜெ.ஆர்.டி. டாடாவும், டைட்டன் நிறுவனமும் கற்றுத்தரும் பாடம்.