நாட்டு நலப்பணித் திட்ட தினத்தை முன்னிட்டு, சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், நஞ்சப்பா ரோடு, அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியுடன் இணைந்து பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

2. a 2 scaled

மாணவர்கள் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தி, மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில்  கல்லூரி டீன் ரம்யா சந்தோஷ், சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி டீன் மோகனசுந்தரம், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரமேஷ், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.