எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியில், 2026-2027ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான மாணவர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் ராஜலட்சுமி வழிகாட்டுதலுடனும், தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல் குமார் முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் கல்லூரி முதல்வர், துணை முதல்வர்கள், செயல் இயக்குநர் மற்றும் கிளஸ்டர் தலைவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றி, மாணவர்களின் கல்விப் பயணம், தனித்திறன் வளர்ச்சி மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.