கோவை டவுன்ஹால், ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ், 31ம் ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை கோலாகலமாக தொடங்கியது.

தொடக்க விழா நிகழ்ச்சியில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் ஆறுமுகம், சக்தி தெய்வானை ஆறுமுகம், பரஞ்சோதி, கீதா, கண்ணபிரான், கிருத்திகா கண்ணபிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், ஏராளமான வாடிக்கையாளர்கள், மேலாளர்கள் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

31ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு சலுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் மேலாளர் தெரிவித்தார்.