டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் புலம், காக்னிசன்ட் அவுட்ரீச் நிறுவனத்துடன் இணைந்து 600 மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை நடத்தியது. இதில் காக்னிசன்ட் நிறுவனத்தைச் சேர்ந்த 20 தன்னார்வலர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
எதிர்கால வேலைவாய்ப்புகள், தொழில்துறை எதிர்பார்ப்புகள், நேர்முகத் தேர்வுக்கான தயாரிப்பு, சுயவிவரம் மற்றும் சுயவிவரக் குறிப்பு தயாரித்தல், குழு விவாதம் மற்றும் மாதிரி நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்திய அவுட்ரீச், பணியாளர் தன்னார்வச் சேவை மற்றும் உலகளாவிய இஎஸ்ஜி தலைவர் பாலகுமார் தங்கவேலு மற்றும் சிஎஸ்ஆர் நிர்வாகி சந்தோஷ் ஆதரவு வழங்கினர்.
நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் சரவணன் கலந்துகொண்டு, மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதில் காக்னிசன்ட் நிறுவனத்தின் பங்களிப்பைப் பாராட்டினார்.
