டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் இளங்கோவடிகள் தமிழ் மன்றத்தின் சார்பாக பாரதிராஜாவின் திரைப்படங்களில் மேலோங்கி நிற்கும் கருத்துக்கள் மண் சார்ந்ததா? மரபு சார்ந்ததா? எனும் தலைப்பில், சுழலும் சொல்லரங்கம் எனும் பட்டிமன்ற நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்த்துறை தலைவர் குப்புசாமி, பாரதிராஜாவின் திரைப்படங்கள் திரை உலகில் புதிய சாகாப்தம் படைத்துள்ளன. அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே இந்த நிகழ்வின் நோக்கம் என்றார்.

பாரதிராஜாவின் திரைப்படங்களில் மேலோங்கி நிற்கும் கருத்துக்கள் மண் சார்ந்ததே, மரபு சார்ந்ததே என இரு குழுவைச் சார்ந்த மாணவர்கள் பேசினர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட என்.ஜி.எம் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் ராதிகா லட்சுமி, பாரதிராஜாவின் திரைப்படங்களில் மேலோங்கி நிற்கும் கருத்துக்கள் மண் சார்ந்ததே எனத் தீர்ப்பு வழங்கினார். பாரதிராஜா தமிழ் திரைப்படத்தின் பிம்பத்தை மாற்றியவர். மண்ணின் மரபைச் சிதையாமல் திரைப்படங்களில் பதிவு செய்தவர் என்றார்.