கோவை, நிர்மலா மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையின் (அரசு உதவி பெறும் பிரிவு) சார்பில்  மகாகவி பாரதியாரின் நினைவு நாளையொட்டி “பாரதி நினைவுநாள் விழா” வையத் தலைமை கொள் எனும் தலைப்பில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரியின் செயலர் குழந்தை தெரேஸ் மற்றும் முதல்வர் மேரி பபியோலா ஆகியோர் வாழ்த்துதலுடன் துவங்கிய இந்த விழாவிற்கு வந்த அனைவரையும்  தமிழ்த்துறைத் தலைவர் மகேஸ்வரி.வரவேற்றார். 200க்கும் மேற்பட்ட இளநிலை முதலாமாண்டு மாணவியர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவிற்கு தமிழ் இலக்கிய கருத்துக்களத்தின் பேச்சுப் பட்டறை தலைவர் டி.ஜே. ஸ்ரீராம் ஆதித்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, “வையம் தலைமை கொள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது  அவர்  பாரதியாரின் கவிதைகளில் உள்ள வேகம், சமத்துவம் , அவர் காலத்தில் பெண்மை மற்றும் முக்கியத்துவம் கொண்ட தலைப்புகள் பற்றி உரையாற்றினார். நிறைவாக பாரதிக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் ‘ஒளிபடைத்த கண்ணினாய் வாவாவா’ எனும் மகாகவியின் புகழ்பெற்ற பாப்பாப் பாட்டை   அனைவரையும் பாட வைத்து நிறைவு செய்தார்.