ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சாய்சிட்டி சார்பில் கீர்த்திமான் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கல்வித் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கீர்த்திமான் பள்ளியின் ஐந்து சிறந்த ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
பள்ளியின் தாளாளர் கோகுல் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரோட்டரி மாவட்ட பொதுத் தோற்றக் குழுத் தலைவர் கோகுல்ராஜ், உதவி ஆளுநர் மருதாசலம், ரோட்டரி சாய்சிட்டி தலைவர் பாலமுருகன், செயலாளர் பாலாஜி, பொருளாளர் ராஜவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
