இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பாக மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வி-டார்ட் குழுமம் நிறுவனர் சித் அகமது, மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்துஸ்தான் கல்விக் குழும செயலாளர் சரசுவதி, நிர்வாக செயலாளர் பிரியா சதீஷ் பிரபு ஆகியோர் நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். முதல்வர் ஜெயா வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் சித் அகமது பேசுகையில்: இளம் தலைமுறையினர் தங்களுடைய திறன்கள், தனித்துவம், தன்னம்பிக்கை மற்றும் சிந்தனைத் திறனை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போதைய உலகில் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகள் குறித்து பேசினார்.
மாறிவரும் தொழில்நுட்ப உலகின் தேவைகளுக்கு ஏற்ப, மாணவர்கள் தொடர்ந்து தங்களுடைய அறிவையும் திறன்களையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய வாய்ப்புகளைத் தேடி தங்களுடைய தொழில் வளர்ச்சிக்கான சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
