2026 ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் நிகழ்ந்த பயணிகள் வாகன விற்பனை மற்றும் மின்சார வாகன விற்பனையின் தரவுகள் வெளியாகி உள்ளன.

கடந்த மாதம் கார்களின் (பயணிகள் வாகனம்) மொத்த விற்பனை 4.48 லட்சம்+. இதில் மாருதி சுசூகி நிறுவனம் மட்டும் 1.76 லட்சத்துக்கும் அதிகமான கார்களை விற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் 65,253 உடன் டாட்டா நிறுவனம், மூன்றாம் இடத்தில் 59,257 உடன் மஹிந்திரா நிறுவனம் உள்ளது. ஆகவே பயணிகள் வாகன விற்பனையில் சென்ற மாதம் மாருதி சுசூகி தான் டாப்.

2 சக்கர வாகனங்கள் விற்பனையில் சென்ற மாதம் ஹீரோ மோட்டர் கார்ப் நிறுவனம் 5.42 லட்சம்+ வாகனங்களையும், டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 4.33 லட்சம்+ வாகனங்களையும், பஜாஜ் நிறுவனம் 2 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களையும், ராயல் என்பீல்டு (ஐஷர்) 1.26 லட்சம்+ வாகனங்களையும் விற்றுள்ளன. எனவே 2 சக்கர வாகனங்கள் விற்பனையில் ஹீரோ நிறுவனம் தான் ஹீரோ.

மின்சார வாகனங்கள்

2 சக்கர வாகன விற்பனையில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 48,000+ வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில் பஜாஜ் – 41,000+வாகனங்கள் , ஏத்தர் எனர்ஜி – 28,000+ வாகனங்கள், ஹீரோ மோட்டர் கார்ப் – 18,000+ வாகனங்கள் மற்றும் ஓலா – 13,000+ வாகனங்களை விற்றுள்ளன.

மின்சார வாகனங்களை மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை பாரம்பரிய 2 சக்கர வாகன நிறுவனங்கள் ( டி.வி.எஸ்., பஜாஜ்) முந்தியுள்ளன என்பது இதில் உள்ள சுவாரசியம்.

மின்சார கார்கள் பிரிவில் 12,983 முன்பதிவுகளுடன் டாட்டா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில மஹிந்திரா 6,367, மூன்றாவது – எம்.ஜி. மோட்டார்ஸ் – 4,568.

*மின்சார கார்கள் விற்பனை விவரம் இறுதியாகாமல் உள்ளதால் முன்பதிவு விவரம் அளவுகோலாக எடுக்கப்பட்டுள்ளது.