நகரப்புறச் சூழலில் வளரும் மாணவ, மாணவிகளுக்குத் தமிழர்களின் பாரம்பரிய கிராமிய வாழ்வியலையும்,  கலாச்சாரத்தையும் உணர்த்தும் வகையில், நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ‘நம்ம கிராமம்’ என்ற கிராமியத் திருவிழா கொண்டாடப்பட்டது.

பள்ளியின் நிறுவனர்-தாளாளர் டாக்டர் பி.என். பழனிசாமியின் பிறந்தநாள் நினைவை முன்னிட்டு,  ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்வு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்டது.

6e 1 scaled

விழாவினை நேஷனல் மாடல் கல்வி குழுமத்தின் தாளாளர் மோகன் சந்தர், உமா மோகன் சந்தர், பள்ளி முதல்வர்கள் பேபி, கீதா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

6d 1 scaled

விழாவையொட்டி, விநாயகர் கோயிலில் இருந்து மாணவிகள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, மாடுகளுக்குப் பொட்டு வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து தீவனம் வழங்கப்பட்டது. பின்னர், கருப்பசாமி கோயிலில் பொங்கல் வைத்து பிரசாதம் படைக்கப்பட்டது.

6h scaled

அம்மன் கோயிலில் முளைப்பாரி வைத்து வழிபாடு நடத்தப்பட்டு, மாணவிகளின் முளைப்பாரி நடனம், பச்சமாவு படைத்தல் மற்றும் பாரம்பரிய வள்ளிகும்மி ஆட்டம் ஆகியவை அரங்கேறின. 6a 2 scaled 6b 1 scaled

பல்வேறு சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கம்பங்கூழ், ராகிக் களி, கொழுக்கட்டை, வடை, பாயாசம் உள்ளிட்ட ஆரோக்கியமான பாரம்பரிய உணவு வகைகளுடன் பலவிதமான சிற்றுண்டி கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

6g scaled 6c scaled

மேலும், ராட்டினங்கள், லக்கி டிரா மற்றும் ஸ்கேரி ஹவுஸ் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பல்வேறு ஆடல்-பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் விழா கொண்டாடப்பட்டது.