ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வைனோரா, நெக்ஸ்பைட் நிறுவனங்களின் உதவியுடன், தேசிய ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது.
இப்போட்டிக்கு இனோபூன், நியோட்ராக் நிறுவனங்களின் நிறுவனர் முரளிகுமார் பாலசுப்ரமணியம், நெடுநல்யானை அப்ஸ்கேல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பிரசன்னகுமார், தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் மேலாளர் ஸ்ரீ தக்ஷின், நுண்ணறி நிறுவனத்தின் நிறுவனர் நவநீத் மாலிங்கன் ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றனர்.
கல்லூரி முதல்வர் சித்ரா இதுபற்றிக் கூறும்போது, மாணவிகளின் படைப்பாற்றல், தொழில்நுட்ப அறிவு மற்றும் புதுமையான சிந்தனைகளை வளர்க்கவும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பயன்பாட்டுக்கு உதவும் புதுமையான தீர்வுகளை உருவாக்கும் நோக்கிலும் இப்போட்டி நடத்தப்பட்டது.
போட்டியின் முதல் கட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட அணிகள் இரண்டாம் கட்டத்தில் தங்களது திட்டங்களுக்கான முன்மாதிரிகளை உருவாக்கி அவற்றை நடுவர்களிடம் விளக்கினர். கல்லூரிப் பருவத்தில் மாணவிகளின் திறமைகளும் நடைமுறைச் சிக்கல்களுக்கு ஏற்றவாறு சிந்திக்கும் அவர்களுடைய சமூகப் பொறுப்புணர்வும் எங்களுக்குப் பெருமையளிக்கிறது என்று குறிப்பிட்டார்.
முதல் சுற்றுப் போட்டியில் தேர்வான 30 அணிகளில் சிறந்த 10 அணிகள் இரண்டாம் சுற்றில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் பரிசு வென்ற 3 அணிகளின் புதுமையான திட்டங்களை, ஸ்டார்ட்அப் நிறுவனங்களாக மாற்றுவதற்கு நடுவர்கள் ஆலோசனை வழங்கினர்.
