கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

விழாவில் நிறுவன தலைவர் பொங்கலூர் பழனிசாமி பேசுகையில்:
ஓணம் திருவிழா கேரள மக்களின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் வாழ்வியல் முறைகளை வெளிப்படுத்தும் சிறப்புமிக்க விழாவாகும். வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதே ஓணத்தின் முக்கியத்துவம்.

மாணவர்கள் இத்தகைய பண்பாட்டு விழாக்களில் பங்கேற்பதன் மூலம் நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை அறிந்து, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்த்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

துணைத்தலைவர் இந்து முருகேசன் பேசுகையில்: ஓணம் விழா மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதோடு, கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் மீதான அவர்களின் ஆர்வத்தையும் அதிகரிக்கிறது.

கல்வியுடன் பண்பாட்டு விழிப்புணர்வும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து விழாவில் கலந்து கொண்டனர். திருவாதிரகளி, ஓணப்பாட்டு, பாரம்பரிய மற்றும் நவீன நடனங்கள், கேரள நாட்டுப்புறக் கதைகளை பிரதிபலிக்கும் நாடகங்கள், ஸ்டாண்ட்-அப் காமெடி, மற்றும் செண்ட மேளம் ஆகியவை இடம்பெற்றன.

விழாவில் கார்மெல் கஃபே சார்பில் பழம்பொறி, உண்ணியப்பம், வாழைப்பழச் சிப்ஸ், பாயசம் மற்றும் கட்லெட் உள்ளிட்ட கேரள பாரம்பரிய உணவு வகைகளும், நைலா கிராஃப்ட்ஸ் சார்பில் பெண்களுக்கான பல்வேறு வகையான நகைகள், அணிகலன்கள், பொம்மைகள் மற்றும் சாவிக்கொத்துகளும், ஆடை அரங்கு சார்பில் கேரளாவின் நவீன மற்றும் பாரம்பரிய ஆடைகளும் இடம்பெற்றன.

இவ்விழாவில் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ராமசாமி, துணை முதல்வர் மைதிலி, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.