ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் கேரளத்தின் கலாச்சாரப் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் ஓணம் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

பூக்கோலப் போட்டி, செல்ஃபி பாயிண்ட், ஓணம் சத்யா மற்றும் கேரள பாரம்பரிய உணவு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
மாவலி மன்னர் வருகை தந்து மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து கேரளத்தின் பாரம்பரியக் கலை வடிவமான கதகளி நிகழ்ச்சி, ஃபேஷன் வாக், திருவாதிரை நடனம், செண்டமேளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
