சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், உலக மக்களால் ‘யோக குரு’ என்று போற்றப்பட்ட பள்ளியின் நிறுவனர் சச்சிதானந்த சுவாமிகளின் முக்தி நாளை முன்னிட்டு 24ம் ஆண்டு குரு பூஜை புதன்கிழமையன்று நடைபெற்றது.

12ம் வகுப்பு மாணவிகளும், ஆசிரியைகளும் திருவிளக்கு வழிபாடு செய்தனர். இதனை பேரூராதீனம், கௌமாரச் செல்வி மரகதம் அம்மையார் நடத்தினார். தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது.

ரூட்ஸ் குழும நிறுவனங்களின் துணைத் தலைவர் வருண் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பள்ளிச் செயலர் கவிதாசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், கல்விப்புல முதன்மையர் ஷீலா கிரேஸ், ஆசிரியர்கள், மாணவ மாணவியர் கலந்துகொண்டு மலர் வழிபாடு செய்தனர்.
