கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் 10வது ஆண்டு தடகளப் போட்டி நேரு விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 17 முதல் 19 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

6f scaled

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பள்ளிகள் போட்டியில் பங்கேற்றன.  தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் கலந்து கொண்டார்.

6e scaled

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் செயலாளர் கவிதாசன் ஒலிம்பிக் கொடியை ஏற்றினார். போட்டியில் பல்வேறு வயதுப் பிரிவுகளுக்கான ஓட்டப்பந்தயம், களப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 12, 14, 17, 19 வயது ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 6 முதல் 10 வயது வரையிலான சிறார்களுக்கான நிகழ்வும் நடைபெறுகிறது.

6d scaled

கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் மற்றும் பி.எஸ்.ஜி பப்ளிக் பள்ளி முதல்வர் கிரிஷ் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மகேஷ் நாராயணன், செயலாளர் பத்மநாபன், பொருளாளர் உமா மகேஸ்வரி, இணைச் செயலாளர் ஐலின் ஜெத்ரோ, நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்மிதா, தீபாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.