ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் அறிவியல் கல்லூரியில் 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் இந்தியக் கடற்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி கமாண்டர் ஸ்ரீராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில்:  சுதந்திரத்திற்கான இந்தியத் திருநாட்டின் நீண்டகாலப் போராட்டத்தையும், வீரர்களின் தியாகங்களையும் நினைவில் கொண்டு, மாணவிகள் நாட்டுப்பற்று, மனஉறுதி மற்றும் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

6. a 5 scaled

கல்லூரி முதல்வர் சித்ரா, நாட்டின் ஒற்றுமை, சமூகப் பொறுப்பு மற்றும் தேசப்பற்று போன்ற உயரிய பண்புகளை மாணவிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று பேசினார்.

தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.