சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சார்பில், கோவை சின்னவேடம்பட்டி நடுநிலைப் பள்ளியில் ரூ.33 லட்சம் மதிப்புள்ள இரண்டு வகுப்பு அறைகள் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம், தனது சமுதாய பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 15 அரசு பள்ளிகளை தத்தெடுத்து 20 வருடங்களுக்கு மேலாக பள்ளி வளர்ச்சி பணிகளை செய்து வருகிறது.

பல அரசு பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக குறிப்பிடத்தக்க அளவில் மாற்றிக் காட்டியுள்ளது, இதன் தொடர்ச்சியாக சின்னவேடம்பட்டி பள்ளியில் ரூ.33 லட்சம் மதிப்புள்ள இரண்டு வகுப்பு அறைகள் கொண்ட கட்டிடம் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம், கோவை ரவுண்ட் டேபிள் 9, கோவை லேடீஸ் சர்க்கிள் 1 ஆகியோர் இணைந்து கட்டி மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் இயக்குனர் சாஹித்யா, கோவை ரவுண்ட் டேபிள் 9 சேர்மன் சஜ்ஜீவ் ஆகியோர் இணைந்து 2 வகுப்பு அறைகளை திறந்து வைத்தனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா, கோவை ரவுண்ட் டேபிள் 9 செயலாளர் விக்னேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனிஷ் & சாய், கோவை லேடீஸ் சர்க்கிள் 1 செயலாளர் சரண்யா, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நேத்ரா & ஆர்த்தி, சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சி.எஸ்.ஆர் ஹெட் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
