கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக பெங்களூரு பி.இ.எஸ். பல்கலைக்கழகம் இணை துணை வேந்தர் நாகார்ஜுனா சதினேனி கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக பெங்களூரு ஹெச்.சி.எல் டெக் தயாரிப்புப் பொறியியல் உலகளாவிய மூத்த துணைத் தலைவர் தனசேகரன் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
விழாவில் 1434 மாணவர்களுக்கு பட்டங்களும், தேர்வில் முதன்மை மதிப்பெண் பெற்ற 14 மாணவர்களுக்கு தங்க பதக்கங்களும் வழங்கப்பட்டன.
விழாவில், கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார், முதன்மை நிர்வாக அதிகாரி முருகையா, கற்பகம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் கார்த்திகைக்குமார், டீன் சோபியா கலந்துகொண்டனர்.
