நிர்மலா மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மாணவிகளுக்கு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, நாட்டு நலப்பணித் திட்ட உறுப்பினர்களின் பங்கு, சேவை மனம், தலைமைத்துவம், சமூக முன்னேற்றத்தில் நம் பங்கு பற்றி எடுத்துரைத்தார்.

நாட்டு நலப்பணித் திட்ட மாணவியர் 300 பேர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் குழந்தை தெரேஸ், கல்லூரி முதல்வர் மேரி பபியோலா தலைமைத் தாங்கினர்.

நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிரேசி, மோகனா, டான்யா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.