இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ராஜவேல் கலந்து கொண்டு பேசுகையில்: மாணவர்கள் முயற்சியை என்றுமே கைவிடக்கூடாது. எப்போதும் ஏதாவது ஒரு வகையில் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில், முயற்சி திருவினையாக்கும். வாழும் நாட்டை மதித்து தமிழ்மொழியைப் போற்றி, பெற்றோர், ஆசிரியர் சொல் கேட்டு முதலில் ஒழுக்கமுள்ள சிறந்த மாணவனாக வளர வேண்டும் என்றார்.
விழாவில் இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதிஷ்பிரபு, கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி கலந்து கொண்டனர்.
