கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், ராசிபாளையம் கிராமத்தில், இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
இதில் தற்போதைய டிஜிட்டல் உலகில் இணையப் பாதுகாப்பின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இணையவழி மோசடிகள், போலியான குறுஞ்செய்திகள் மற்றும் இணைப்புகள், வங்கிக் கணக்கு மற்றும் ஓ.டி.பி. விவரங்களைப் பாதுகாப்பது, வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது, சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், சந்தேகத்திற்குரிய தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் இணையதளங்களை அடையாளம் காணும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
