வித்யா நிகேதன் பள்ளி நடத்திய சகோதயா ஸ்பெல் பீ போட்டியில், கோவை மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 30 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியின் சார்பில் 10ம் வகுப்பு மாணவர்களான சேந்தன் அமுதன், தேஜஸ் கன்னித்தொடி ஆகியோர், 2-வது இடத்தைப் பிடித்தனர். முதல்வர் ஸ்ரீ வித்யாசங்கர் மாணவர்களின் சாதனையைப் பாராட்டினார்.