கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் கல்வி மற்றும் மருத்துவத்தின் ஓர் அங்கமாக ‘ஜி.கே.என்.எம் செவிலியர் கல்லூரி’ பிரம்மாண்ட திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு கல்லூரியை திறந்து வைத்தார். தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முன்னிலை வகித்தார்.

6 4 scaled

5 5 scaled

நிகழ்விற்கு குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் துணைத் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள், நிர்வாகிகள், செவிலியர்கள், பேராசிரியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

(Detailed news will be uploaded soon)