சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறன் மற்றும் தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், “நேர்காணலில் வெற்றி பெற தகவல் தொடர்புத் திறன்களை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜ்குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் இயக்குநர் மற்றும் செயலாளர் சேகர் தலைமை வகித்து, இன்றைய போட்டி நிறைந்த உலகில் மாணவர்கள் சிறந்த வேலைவாய்ப்பைப் பெற தகவல் தொடர்புத் திறன், ஆளுமை மேம்பாடு மற்றும் தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்திப் பேசினார்.

சிறப்பு விருந்தினராக டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் மாரிமுத்து கலந்துகொண்டு, நேர்காணலுக்கான தயாரிப்பு, வாய்மொழி மற்றும் உடல்மொழித் தொடர்புத் திறன்கள், சிறந்த சுயவிவரக் குறிப்பு தயாரித்தல், தன்னம்பிக்கை வளர்த்தல், குழு விவாதங்களில் திறம்பட பங்கேற்பது மற்றும் மனிதவள நேர்காணல்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கினார்.