கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, யுனைடெட் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை இணைந்து புகையிலை, போதை பொருள், மது ஆகியவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கிக்கூறும் விதமாக மாபெரும் விழிப்புணர்வுக் கண்காட்சியை  நடத்தியது.

இக்கண்காட்சியில்,போதைப்பொருள் இல்லா இந்தியா, சாலைப் பாதுகாப்பு, குழந்தைகள் மீதான வன்கொடுமைத் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, இணையவழிக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

kasc 2 scaled

கண்காட்சியை கல்லூரி முதல்வர் சங்கீதா தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக யுனைடெட் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

கல்லூரிச் செயலர் சி. ஏ. வாசுகி கண்காட்சியைப் பார்வையிட்டார். ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் சமூகப் பொறுப்புணர்வுமிக்க தேசத்தை உருவாக்குவதில் மாணவர்கள் முனைப்புடன் பங்காற்ற வேண்டும் என்றும் ஊக்கமளித்தார். 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.