தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜூலை மாதத்திற்கான பயிற்சி வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது.
தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள், மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் அடையாள சான்று சமர்ப்பித்து பயிற்சிக் கட்டணம் ரூ.590 செலுத்த வேண்டும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி நேரம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை.
