சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதலாம் மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் லட்சுமிநாராயணசாமி, தலைவர் சுகுணா லட்சுமிநாராயணசாமி, செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன், இயக்குநர் சேகர், முதல்வர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய செயலாளர் டாக்டர் ஸ்ரீகாந்த் கண்ணன், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, ஒழுக்கம், மனிதநேயம், தொழில்நுட்பத் திறன் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொண்டு எதிர்காலச் சவால்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இயக்குநர் சேகர், மாணவர்கள் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து கடின உழைப்பின் மூலம் வெற்றி பெற வேண்டும் என்றும், கல்லூரி வழங்கும் அனைத்து கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். விழாவில் பெற்றோர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.