தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த பயிற்சி நடைப்பெறுகிறது.
இப்பயிற்சியில் உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மகளிர், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவ, மாணவியர்கள், இதர பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் பங்குபெறலாம்.
இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் 18.06.2026 மற்றும் 19.06.2026 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ. 3,540/- வசூலிக்கப்படுகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிகையிலான இடங்களே உள்ளது.

