கோவை, ஆக.20 இந்தியாவின் மிகப்பெரிய ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான இந்தியன் ஹோட்டல் நிறுவனமானது, அவிநாசி சாலையில் கோவை விமான நிலையம் அருகில் ஜின்ஜர் ஹோட்டலை திறந்துள்ளது. இது குறித்து ஐ.ஹெச்.இ.எல் நிறுவனத்தின் புதிய வணிகங்கள், ஹோட்டல் திறப்புகள் மற்றும் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றின் நிர்வாக துணைத் தலைவரான தீபிகா ராவ் கூறுகையில், கோயம்புத்தூர் ஒரு ஸ்மார்ட் சிட்டியாக வலுவான உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டினைக் கொண்டுள்ளது. இப்படியான நகரத்தில் ஜின்ஜர் ஹோட்டல் துவக்கமென்பது பெரும் மகிழ்ச்சிக்குரியது. மேலும், ஜின்ஜர் ஆனது ஆடம்பரத்தின் அடையாளம். நகர்த்திற்கு வரும் பெரு நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வளர்ந்து வரும் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும்.
இந்த 68-கீ ஜிஞ்சர் கோயம்புத்தூர் ஏர்போர்ட் ஹோட்டலானது கோவை விமான நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருப்பது மிகவும் வசதியானதாகும். தவிர, டைடல் பார்க், கோடிசியா வர்த்தக மையம், ஐடி பார்க் போன்ற முக்கிய வணிக மாவட்டங்களுக்கு அருகாமையில் உள்ளது. இந்த ஹோட்டலில் ஒவ்வொரு நாளுமே சிக்னேச்சர் டின்னர் பரிமாறப்படும். பார், உடற்பயிற்சி மையம் மற்றும் கருத்தரங்கிற்கான பிரத்யேக அரங்கு ஆகியவை அமைந்துள்ளது.
ஐடி துறை, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் மேம்பட்ட நகரமாக வளர்ந்துள்ளது கோவை. இது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் அடுக்கு – 2 நகரங்களில் ஒன்றாகும்.
இந்த ஹோட்டல் உடன் சேர்த்து, ஐ.ஹெச். சி.எல். நிறுவனத்துக்கு தமிழ்நாட்டில் மொத்தம் 18 ஹோட்டல்கள் உள்ளன. மேலும் 2 ஹோட்டல்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது என்றார்.