கோவையில் நீலாம்பூர் மற்றும் துடியலூரில் லட்சக்கணக்கில் பாரம்பரிய மற்றும் நாகரீக ஆடைகள் கலெக்ஷனுடன் புதுவித ஷாப்பிங் அனுபவத்தை வழங்கி வரும் ஸ்ரீ கணபதி மார்ட் நிறுவனத்தின் 3வது கிளை   குனியமுத்தூர் பகுதியில் வெள்ளிக்கிழமை கோலாகலமாக துவக்கி வைக்கப்பட்டது.

பாலக்காடு மெயின் ரோடு, இடையார்பாளையம் பிரிவில் அமைத்துள்ள இந்த புது ஷோரூமில் வேறு எங்கும் காணமுடியாத அளவிலான பல லட்சம் கலெக்ஷன்கள் இடம்பெற்றுள்ளன.

7 scaled

குனியமுத்தூரில் ஸ்ரீ கணபதி மார்ட் மூன்றாவது பிரம்மாண்ட கிளையை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி. அன்பரசன் துவக்கிவைத்தார். ஸ்ரீ கணபதி மார்ட் நிர்வாக இயக்குனர் கணபதி மற்றும் அவரது மனைவி சுபிக்ஷா முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர ஸ்வாமிகள் மற்றும் பேரூர் ஆதீனம்  மருதாசலம் அடிகளார், அரோமா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி விஜயலக்ஷ்மி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

16 scaled

நிறுவனர் டி.எம்.கணபதி முதலியார் படத்தை, கோவை கிளாத் மெர்ச்சண்ட் சங்க தலைவர் ரவீந்தரன் மற்றும் ஷோபா சிண்டிகேட் நிறுவனத்தின் இந்தர் சந்த் திறந்து வைத்தனர்.

இந்த புதிய கிளையின் புடவை பிரிவு விற்பனையை அரோமா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி விஜயலக்ஷ்மி துவக்கி வைக்க, அதை குணஸ்ரீ சீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குணசேகரன்  பெற்றுக்கொண்டார்.

3 1 scaled

குழந்தைகள் உடை பிரிவை சிட்டி யூனியன் வங்கியின் பொது மேலாளர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். ஆண்கள் உடை பிரிவை ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் துவக்கி வைத்தார்.

அதன் முதல் விற்பனையை செல்வம் ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் நந்தகுமார் துவக்கி வைக்க, அதை ஜி.எஸ்.கே. காம்ப்ளெக்ஸ் நிறுவனத்தின் சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.

20 scaled

திறப்பு விழா சலுகை

திறப்பு விழாவை முன்னிட்டு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சேலை ரகங்கள் ரூ.99, ரூ.199, ரூ.299 முதலே தொடங்குகின்றன. பெண்களுக்கான குர்தி 3 செட் ரூ.999, லெக்கின்ஸ் ரூ.199, காட்டன் நைட்டி 2 செட் ரூ.500, பெண்களுக்கான டி சர்ட், சார்ட்ஸ் 5 செட் ரூ.499,  காட்டன் ஃப்ராக் 2 செட் ரூ.499, பளாஷோ பேண்ட் 3 செட் ரூ.499, பாய்ஸ் டி சர்ட், நிக்கர் 5 செட் ரூ.499, செக்குடு லுங்கி 2 செட் ரூ.300, மென்ஸ் டி சர்ட் & பெர்முடாஸ் 5 செட் ரூ.1000, பெட்சீட் 2 செட் ரூ.250. மேலும் ஒவ்வொரு பர்சேஸிற்கும் நிச்சயப்பரிசு உண்டு.