டிரினிட்டி கண் மருத்துவமனை & லேசிக் மையத்தில் அலங்காரம் என்ற பெயரில் மெஹந்தி போட்டி நடைபெற்றது.

காலை மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளில் மொத்தம் 100 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டியை சப்னா நக்பல் மதிப்பீடு செய்தார்.  பரிசளிப்பு விழா டிரினிட்டி ஹெல்த் நிறுவனத்தின் சிஓஓ ஜாஸ்மின் தலைமையில்,  ஏவிபி ஜோ, குழும மார்க்கெட்டிங் தலைவர் அஷ்வின் ஜெயகரன் மற்றும் மார்க்கெட்டிங் ஜிஎம் பிரேம்சந்த் முன்னிலையில் நடைபெற்றது. வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து போட்டியாளர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.